திங்கள், 1 ஆகஸ்ட், 2011

எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்திலேயே நிறுத்தப்பட இருக்கிறது .












       Royapuram Station to be developed as 3rd Terminal in Chennai      தென் மாவட்டத்தை சேர்ந்த பொது  மக்கள் இரயிலில் சென்னைக்கு செல்வதெனில் பெரும் பான்மையானவர்கள் எக்மோர் ரயில் நிலையத்தில் இறங்கி சென்னையின் பிற பகுதிக்கு செல்வார்கள். 
           தென்னக ரயில் நிர்வாகத்தின் தற்போதைய நடவடிக்கைகளால் அனைத்து ரயில்களும் அல்லது புதிதாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்திலேயே நிறுத்தப்பட இருக்கிறது .இதற்க்கு சொல்லப்படும் காரணம் என்னவெனில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இடம் பற்றாக்குறை காரணமாக வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ஒரு பகுதி எக்மோரில் இருந்து புறப்படும் . தற்பொழுது பகலில்  வடமாநிலங்களுக்கு செல்லும் 12   இரயில்கள் எக்மோரில் இருந்து இயக்கப்படுகிறது .வட மாநிலங்களுக்கு இரயில்கள் மேலும் அதிகரிக்கபடவும், புதிய இரயில்கள், புதிய வழித்தடங்களில் இயக்கவும் எக்மோர் ரயில் நிலையம் தேவைப்படுகிறது.
          எனவே தாம்பரம் இரயில் நிலையம் விரிவாக்கப்பட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் இயக்க தென்னக இரயிவே நிர்வாகம் முடிவு செய்து அதற்க்கான பணிகளை விரைவாக செய்து வருகிறது.
          எக்மோரில் ரயிலுக்கு  வரும் தென் மாவட்ட மக்கள் தாம்பரம் செல்ல வேண்டும் என்பது அவர்களது உரிமையை பறிக்கும் செயல். எந்த காரணம் கொண்டும் தென்மாவட்டங்களுக்கு தற்போது செல்லும் ரயில்கள், புதிய இரயில்கள் அனைத்தும் எக்மோரில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும்       என்பது தென்மாவட்ட மக்களின் கோரிக்கையாகும். 
        
          இரயில் நிர்வாகம் கூறும் இடம் இல்லை என்பதற்கு போதிய இடமுள்ள நம் புராதாரன சின்னமான தென் இந்தியாவின் முதல் ரயில்நிலையமான ராயபுரம் இரயில் நிலையத்தை ரயில் முனையமாக உருவாகாப்பட வேண்டும் 
     
                                 ராயபுரம் ரயில் முனையம் அமைக்கப்பட்டால்


* தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து இரயில்களும் எக்மோரில் இருந்து இயக்கப்படும்.

*வரும் நாளில் மேற்க்கே செல்லும் இரயில்கள் அரக்கோணத்தில் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட்டு சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

*தற்போது வட மாநிலங்களுக்கு எக்மோரில் இருந்து இயக்கப்படும் இரயில்களால் குமுடிப்பூண்டி பீச் இரயில் மார்க்கத்தில் ஏற்ப்படும் நெரிசல் தவிர்க்கப்படும் 

* எக்மோர் முதல் பீச் ரயில்நிலையம் வழியாக இயக்கப் போதுமான இருப்புப் பாதை இல்லை எனவே இரயில்கள் கிராசிங்கிர்க்காக குமுடிப்பூண்டி பீச் மற்றும் பீச் தாம்பரம் இரயில்கள் காத்து நிர்ப்பது தவிர்க்கப்படும் 

*தமிழ்நாட்டின்  மேற்கு மாவட்டம் மட்டும் அல்லாமல் கேரளாவில் இருத்து வரும் இரயில்கள் அரக்கோணத்தில் கிராசிங் பிரச்சனை பிளாட்பாரம் இல்லாமல் வழியிலேயே காத்திருப்பது என்பது அவசியமில்லாமல் போகும் 

*தமிழகத்தின் தென் மாவட்ட, மத்திய, மேற்கு பகுதிகளில் இருந்து வட மாநிலங்களுக்கு சென்னை வழியாக செல்வதெனில் எக்மோரில் இறங்கி இடதுபுறம் திரும்பினால் சென்ட்ரல் வலதுபுறம் திரும்பினால் ராயபுரம் இரயில் நிலையங்கள் ஒரு முக்கோணமாக அமைந்திருப்பதும் . வட மாநிலங்களில் இருந்து வரும் மக்கள் தமிழக பிற பகுதிகளுக்கு செல்லவும் எளிதாக இருக்கும்.


             நமக்கு தெரிந்த இந்த விபரம் நம் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நம் சட்டமன்ற உறுப்பினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மத்திய மாநில அமைச்சர்களுக்கும் தெரியுமா? 
தெரிந்தால் ஏன் செய்யவில்லை ? தெரியாதெனில் மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து மக்களுக்கு சேவை செய்யத்தான் இவர்கள் இந்த பதவிக்கு வருகிறார்களா ? 
           எப்படி இருப்பினும் நாம் நம் தேவையைப் பெறவும் உரிமையை கேட்டுப்பெறுவோம் தவறுகளை சுட்டிக் காட்டுவோம் ஏற்க்க மறுத்தால் குட்டிக் காட்டுவோம்
           மக்கள் நினைத்தால், மக்கள் சக்தி ஒன்றுபட்டால் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்பதற்கு எத்தனையோ முன் உதாரணம் இருக்கின்றது என்பதை மீண்டும் உணர்ந்து உணர்த்துவோம் வாரீர் வாரீர் 


நீங்களும் பங்குபெற தொடர்புக்கு 9444305581
வலைத்தளம் www .trprt .blogspot .com   

பேஷ் புக்கில் உங்களது விருப்பம் தெரிவிக்க பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக